Tuesday, July 23, 2013

பழி-பாவத்திற்கு அஞ்சி வாழ்வதே ஆண்டவனுக்கு காணிக்கை.

அன்பே ஆண்டவன்  என்றால்

வெறுப்பு என்ற சொல் ஏன்?

அதுவும் ஆண்டவன் ஏற்படுத்தியதே.

அமிர்தமும் ஆலகால விஷமும்

படைத்தாலும்   அதை அறிவு

அனைத்து ஜீவனுக்கும் கொடுத்தாலும்

மனிதர்களுக்கும்  அதிகமாகவே.

அதனால் அவன் தானம் செய்கிறான்.

அதனால் அவன் கஞ்சனாகிறான்.

அதனால் அவன் பேரசைப்படுகிறான்.

அதனால்  அவன் ஆணவத்தில்  அழிகிறான்.

அதனால் அவன் கோபப் படுகிறான்.

அதனால் அவன்  தன் எதிர்காலத்திற்கு

சேமிப்பதில் நிகழ்கால மகிழ்ச்சியை இழக்கிறான்.

அவன் நினைக்கிறான் எனக்குள்ள தீய குணங்களும்

ஆண்டவன் அளித்ததே;  ஆனால்

அந்த  தீய எண்ணங்களைத் தவிர்த்து நல்லதை ஏற்க

அறிவுரையை அளிப்பதும் ஆண்டவனே;

இராவணனின் தீய எண்ணம் மாற அறிவுரை பெற்றும்

ஏற்காமல் அழிந்ததும்  இறைவன் கொடுத்த

நல்லறிவு  ஏற்காததே;

தீயவை செய்தபின் அவையில் பறைசாட்ட முடியுமோ?

நல்லவை செய்தால் நாலுபேரிடம்  கூறத் தோன்றும்.

தீயவை   அகத்தில் இருந்து வேதனை தரும்.

வெறுப்பை  அன்பாக மாற்றும் அறிவளித்த ஆண்டவன்,

ஆகவே அன்பே ஆண்டவன்;
 நல்லதை செய்வதே ஆண்டவனுக்கு காணிக்கை.

அசோகன் செய்த தீயவை  அவன் செய்த அறச்செயலால்  போற்றப்பட்டன.

கர்ணன் தன வீரனாக இருந்தும் தீய நட்பால் களங்கமடைந்தான்.

அவள் அன்னையோ  மந்திரம் சோதிக்க அன்னையானாள்.

ஊர்ப்பழி ஏற்காமல் இருக்க ஆற்றில் எறிந்தாள். ஆனால்

பழி ஏற்காமல் இருக்க முடியவில்லை.

பழி-பாவத்திற்கு அஞ்சி வாழ்வதே ஆண்டவனுக்கு காணிக்கை.

அன்பே ஆண்டவன்.






No comments: