Tuesday, June 25, 2013

முதலில் அன்பு/பற்றுவை. நம்பிக்கை வை, ஐயம் அகற்று.அன்பே ஆண்டவன்.

அன்பே ஆண்டவன்.

 இந்த அன்பு  என்பதே இச்சை ஏற்படுத்தி

 ஞானத்தைக் கொடுத்து

 கிரியையில் ஈடுபடுத்தும்.

இதை ராமனுஜரிடம்  வந்த ஒரு பக்தனுக்கு விளக்குகிறார்.

பக்தன்  ராமாநுஜரிடம் ,
நான் இறைவனைக் காண வேண்டும்.

ராமானுஜன் அவனிடம் ,

 நீ யார் மீதாவது அன்பு  வைத்துள்ளாயா?

பக்தன்:
 அய்யா!நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்

.யாரையும் நான் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை

.எனக்கு யார்மீதும் அன்போ காதலோ கிடையாது.

இதே கேள்வியை மூன்றுமுறை ராமானுஜர் கேட்க ,

அவன் நான் யார் மீதும் அன்பு வைக்கவில்லை,

நான் உத்தமன்.குணசீலன் என்றான்.

இறுதியில் ராமானுஜர் ,

நீ இறைவனைக் காண முடியாது.

இறைவனைக்காண  அன்பு வேண்டும்.

அந்த அன்பில் நம்பிக்கை வேண்டும்.


அவநம்பிக்கை இருக்கக் கூடாது.

முக்கியமாக சந்தேகத்திற்கு

 இடம் அளிக்கக் கூடாது.

இல்லறத்தில் கணவன்-மனைவி

ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைக்கவேண்டும்.


அங்கு சிறு சந்தேகம் இருந்தாலும் ,


அவநம்பிக்கை ஏற்பட்டாலும்  விரிசல் தான்.

அவ்வாறே நட்பு;பக்தி;

அன்புகாட்டாத உனக்கு ஆண்டவன் மீது அன்பு இருக்கவேண்டும்.


அதுவே இச்சையாக மாறி

 ஞானத்தைக் கொடுத்து

 இறைவனைக்காணும்

 நம்பிக்கையையும்

அதற்கான செயல் முயற்சியும் தரும்.

முதலில் அன்பு/பற்றுவை.

 நம்பிக்கை வை,

ஐயம் அகற்று.

 இல்லை எனில்  இறைவனைக் காண முடியாது.

அன்பே  ஆண்டவன்.

காதலாகி கசிந்துருகி  கண்ணீர் மகிழ்கி


அதுதான்  மீரா, ஆண்டாள்,ஆழ்வார்கள்,நாயன்மார்கள்

அடியார்கள்  காட்டும் பக்தி.


3 comments:

G.M Balasubramaniam said...

அன்பு ஒன்றுதான் அள்ள அள்ளக் குறையாதது. ஆனால்......? நம்மில் எத்தனை பேர் அடுத்தவரை நேசிக்கிறோம். அன்பே சிவம் LOVE IS GOD என்பதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கிறது. முதன் முதலில் என் மின் அஞ்சலில் வந்தபதிவு இது.என் வலையின் முகப்பில் நான் எழுதத் துவங்கும் போதே எழுதி இருக்கிறேன். வந்து பாருங்களேன். வாழ்த்துக்கள்.

Ranjani Narayanan said...

அன்பு என்றாலே நாம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் வருவது என்றுதான் நினைக்கிறோம். இறைவனிடம் பக்தி என்கிறோம். அன்புதான் நாளடைவில் பக்தியாக மாறுகிறது.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி...

Unknown said...

love is sharing and caring ..on we are interested..give away every thing ...to that what you are ..looking for.life ..knowledge..position ..fame..power...the moktcha or moha..