Friday, April 26, 2013


 மனிதன்    மிருகம்  தான்.

அவனுக்கு மிருக குணம் தான்.

அவனை மனித குணமாக மாற்ற

ஒரே மார்க்கம் பக்தி தான்.

ஆனால் , அந்த மார்க்கம் பல வழிகளில்

மக்களை சந்தேகத்திற்கு ஆளாக்குகிறது.

காரணம்    நாத்திகவாதமா? இல்லை.

ஆத்தீகர்களின்  ஆணவம்.சுயநலம்.

ஆடம்பர வாழ்க்கை.

ஆண்டவனின் அருளுள் பெற  பூஜைகள்.

சிறப்பு வழிபாடுகள்.

வேள்விகள். சடங்குகள்.
மடாலயங்கள்.
ஆஷ்ரமங்கள்.
தங்கம் வைரம் நவரத்தினங்கள்.

ஆனால் ஆன்மீக ஆதி வழிகாட்டிகள்
 வாழ்ந்த வாழ்க்கை
வெள்ளி சிம்மாசனத்தில் அல்ல.
பாலா/தேனா /பன்னீரா/ அல்ல.
 அருகம்புல்,துளசி,வில்வம் எருக்கு என்று
எளியோருக்கும் கிடைக்கும் எளிய பொருட்கள்.
அவையும்  ஆரோக்யத்துடன்  இணைந்தவை.

இன்று வெளிநாட்டு வாசனைப்பொருள்கள்.

மின்சார சரவிளக்குகளால் ஆனா இறை உருவங்கள்.

ஆபாச ஆட்டங்கள்,இசைகள்,
தெய்வீகப்பாடல் பாடும் போதே பக்திப்பாடல் போதும்;
திரைப்படப்பாடல் பாடு என்று கூச்சல் குழப்பம்.
இறைவனை துரிதமாக வழிபட முக்கியபிரமுகர்கள்,
மிகமிக முக்கியப்பிரமுகர்கள்,
நுழைவுக்கட்டணம்.
அதிலும் தில்லுமுல்லுகள்.
அங்குள்ள கடைகளில் உள்ள அதிக விலை .
சில்லறைத் தட்டுப்பாடு.
,இயற்கை உபாதிகளுக்குப் படும்  அவஸ்தைகள்.
ஏமாற்றும் பேர்வழிகள்.

ஆடம்பர பக்தி ;

காதலாகிக் கசிந்துருகி கண்ணீர்மல்கி
என்ற இறைவழி  பாடு எங்கோ சென்று,
பணமே  இறைவன் என்றே
ஆஸ்திகர்கள்  இறைவரம் பெற
பொருளற்ற பொருளாதாரம்
என்று ஊழல் ,கையூட்டு ,கறுப்புப்பணம்
கனகக் கோயில்கள்.
Friday, April 12, 2013

யாரே அனுபவிப்பர்!பாவிகாள் அந்தப்பணம்!

 இவ்வுலகில்  பிறந்த மனிதர்கள் ,

இறைவனின் அபூர்வ ஆற்றல் அறிந்தும்,

இறைவன் மீது முழு நம்பிக்கை இல்லாமல்,

இன்னல்களை இரு கரங்கொண்டு  வரவேற்கின்றனர்.

  இப்படித்தான் .  எப்படி ?

இறைவன் அளித்த   அறிவை,

நல்வழி தீவழி  என்று புரியும்

அறிவை அறவழியில் பயன் படுத்தாமை.

அவன் அளித்த  ஆற்றலைக்கொண்டு,

நேர்மையற்ற வழியில் செல்லுதல்.

ஒரு அரசு அதிகாரி,

ஆட்சி செய்யும் அமைச்சர்கள்,

தங்கள் அளவுக்கு மீறி கைஊட்டம்

ஊழல்  புரிந்தால் தான்

இவ்வுலக வாழ்க்கை என்றே

வாழ்கின்றனர்.

பணம் சம்பாதித்து   சுகமான வாழ்க்கை

வாழ்ந்தாலும்  அளவுக்கு மீறி

சம்பாதிக்கின்றனர்.

விளைவு?

மன நிம்மதி இன்றியே வாழ்கின்றனர்;

மன சாக்ஷி   அவர்களை மகிழ்விக்காது.

குவியும் செல்வம் தங்கள் செல்வங்களுக்குப்

பயன்படுமா?அவர்களை ஆனந்தமடையச்செய்யுமா ?

அப்பொழுது தான் சாத்தனின் சக்தி வேலை செய்யும்.

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்

அமைதியற்ற நிலை.

ஒருவர்  குவித்த பணம்  மற்றவர்களுக்கு

யாருக்கோ பயன் படும்.

இந்த நிலையை  அவ்வையார் பாடுகிறார்

பாடு பட்டுத் தேடி  என்கிறார்--அரும்பாடு பட்டு ,
அதாவது அவன் படும்   பாடு
அந்த செல்வத்தை பல தலைமுறைக்கு சேர்த்து

அதற்காக பல நீதி-அநீதி முறைகளைப் பின்பற்றி,

அந்தப்பணம்  யார் அனுபவிக்கிறார்கள்?

பணத்தைப் புதைத்து வைப்பவர்கள்,

கேடு கேட்ட ம்மநிதர்கள் என்கிறார்.

கூடிவிட்டு  ஆவிதான் போன பின்

இந்த செல்வங்களை யார்தான் அனுபவிப்பார்கள் .

இறைப்பற்றுடன் அவன் அளிக்கும்  பதவியை ,

அதிகாரத்தைப் பலருக்கும் பயன் படுத்த வேண்டும்;

கடமை செய்யாமல் ஊழல் புரிவோர்  பாவிகள்.

அவர்கள் செல்வம் யாருக்குப் பயன்படும்?

ஒருவருக்கும் பயன் படாது.

தீயவழியில்  சேர்த்த பணமே துன்பத்திற்குக்  காரணம்;

விபத்து  நோய்களுக்குக் காரணம்,

அந்திம காலத்தில்
 பல வேதனைகளை
அனுபவிப்பதற்குக்  காரணம்.

ஆண்டவன் அளிக்கும் பதவிகள் மனிதனுக்கு

ஆண்டவன் வைக்கும் பரிசோதனை.

ஆண்டவன் அளிக்கும் செல்வம் ஒரு பரிசோதனை.

அதில் தோற்றவர்களுக்கு  நிம்மதி இருக்காது.

அவனால் வேதனைப்படும் ஆத்மாக்கள் சபிக்கும்;

அது  புரியாமல் தீய வழியிலேயே மனிதன்

பணம் சம்பாதிக்கிறான்.-விளைவு ?

எத்தனை கோடீஸ்வரர்களுக்கு  வாரிசுகள் இல்லை.

இறுதிகாலத்தில் புத்திர சோகத்துடன் இறக்கின்றனர்.

பலவிதமான துன்பங்கள்;நோய்கள்;மனதில் வேதனைகள்;

பாடலை பாருங்கள்:

பாடுபட்டுத் தேடிபணத்தைப்
 புத்தைத்துவைத்த கேடுகெட்ட மானிடரே -!-கேளுங்கள்

கூடு விட்டு ஆவிதான் போன பின்

 யாரே  அனுபவிப்பர்!பாவிகாள் அந்தப்பணம்!
Friday, April 5, 2013

உண்மையில் மனிதனின் அறிவு பெருகுகிறதா?

உலகில்  மனிதன் அறிவுடன் பிறந்தாலும் அந்த அறிவுத்திறன் வேறுபடுவது
விந்தையிலும் விந்தை.  அது தான் இன்றைய அறிவியல் உலகில் எத்தனை பெரியார்கள் தோன்றினாலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆலயங்களின் உண்டியல் நிரம்புகிறது. அர்ச்சகர்கள் மகிழ்கிறார்கள்.
அதே சமயம் விபத்துக்கள்,கொலை,கற்பழிப்பு,லஞ்சம்,ஊழல் ,தற்கொலை,கொள்ளை,வழிப்பறி,கலப்படம்,எடை குறைவு (பொருள்),கருப்புப்பணம்,கறுப்புச்சந்தை,தேர்வுத்தாள்,தேர்வு மையம் அனைத்திலும் ஊழல்.

உண்மையில் மனிதனின் அறிவு பெருகுகிறதா? பெருகிய அறிவு தீய வழியில் செல்கிறதா?    

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no peace of mind  என்ற வாழ்க்கையில் தான் அனைவரின் நிலை. சாமியார்களும் நிம்மதி இல்லை.அவர்களும் பல ஊழலில் சிக்குகின்றனர் . இவைகளை கலியுக தர்மம் என்பதா?மக்களின் சயநலம் என்பதா? அறிவு  தீய வழியில் செல்கிறதா ?ஆண்டவனின் லீலை என்பதா?

எனது சிந்தனையில் அதர்மத்துக்குத் துணைபோகிறவர்கள் அதிகம்.

இதற்காக  நாம் மனித ஆற்றலுக்கு அப்பால் இயக்கும் இறைவனை வழிபடுவோம்.

சிரத்தை;பக்தி.

நமது   மனம் என்பது கடல் அலை போன்று ஓயாமல் சிறிய-பெரிய பழைய-புதிய  எண்ணங்களால் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். இதை நிலைப்படுத்த  சாதரணவர்களால்    முடியாது.  விளையாட்டு வீரர்கள் மனம் 

ஒருநிலைப்படுத்துவார்கள் .கேரம் விளையாட்டில் வெல்பவர்கள் அடிப்பான் ,காயின் ,அந்த குழி  மூன்றையும் ஒரே கவனமாகப்  பார்த்து அடிப்பார்கள்.
மன நிலைப்பாடு இல்லாதவர்கள் கண்ணை மூடி எதையோ அடிப்பார்கள் அடிப்பான் எதிலோ மோதி ஒருகாயின் விழுந்துவிடும்.
 இதை குருட்டா ன்போக்கு /மாட்டடி  என்பர். மன ஒருமைப்பாடு உள்ளவர்கள் கேரம் விளையாட்டில் எப்பொழுதும்  வெல்வர். அதிகம் பேசமாட்டார்கள். குருட்டான் போக்கில் தடால் அடி அடிப்பவர்கள்  வெல்ல முடியாது. அவ்வாறே மன சஞ்சலம்  இல்லாதவர்கள்  தான் எதிலும் வெல்ல முடியும்.
 அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் /இறை பக்தியில் ஈடுபடுபவர்கள் 
கவனம் சிதறாமல் இருப்பார். அபிராம பட்டர் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். 

தேவியின்  தியானத்தில்  மூழ்கி இருந்த அபிராமி பட்டருக்கு அரசன் வருகை தெரியவில்லை. அரசருக்கு கோபம் .அன்று முழு இருட்டு. அமாவாசை.மன்னர்    கேட்க அவர் தேவியின் தியானத்தில்  பௌர்ணமி என்று சொல்ல ,அதை நிரூபிக்கவேண்டிய இக்கட்டில் இருந்து தேவி காப்பாற்றிய கதை அபிராமி அந்தாதி படிப்போருக்குத் தெரியும்.

அவ்வாறே நியுடன் முதலியோருக்கு வைத்த உணவை மற்றவர்கள் சாப்பிடுவார்கள். இவர்களிடம் கேட்டால்  ஆராய்ச்சியில்  ஈடுபட்டமணம் பசி அறியவில்லை. நான் சாப்பிட்டகிவிட்டது என்பர். இதுதான்  மன ஈடுபாடு.

புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு  பலர் மனம் பல கற்பனையில் மூழ்கும். எப்பொழுதும் கையில் புத்தகம் இருக்கும். மதிப்பெண் வராது. சிலர் படிக்கும் நேரம் குறைவாக இருக்கும் .மதிப்பெண்கள் அதிகம் எடுப்பார்கள் .

  சிலர் படிக்கவே  மாட்டார்கள். அதிகமாக மதிப்பெண்கள் பெறுவார். பால கங்காதர திலகர் வகுப்பறையில் எதையும் குரிப்பெடுக்கமாட்டா. ஒருமுரு ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது. எழுதிவிட்டாயா ? என்று கோபமாக கேட்டார்.
உடனே திலகர் எழுதிவிட்டேன் என்றார். எங்கே?ஆசிரியரின் அடுத்த வினா?

திலகர் தன தலையில் அடித்து இங்கே என்றார். ஆசிரியர் படி என்றார். ஆசிரியர் கூறியவற்றை அப்படியே கூறினார்.
இது ஒருவகையான தியானம்.

 நம்மில் பலருக்கு கவனச் சிதறல்கள் அதிகம். அதனாலேயே  நாம் தோல்வியைத் தழுவுகிறோம்.
அது  எப்படி ?நமக்குத் தெரியாது.

அதற்கு ஒரு வைராக்கியம் வேண்டும்.தியானத்தில் ஈடுபடவேண்டும்.

அந்த தியானம் வால்மீகி,அருணகிரிநாதர் போன்று ஏற்படவேண்டும்.

ரமணமஹரிஷி  மௌன சாமியார். அவர் வரலாறு  அவர் மன ஒருமைப்பாடு 
நாம் காணும் இன்றைய சாட்சி. 

இவ்வாறான ஒருமைப்பாடான பக்தி  நாம் பெற மனதை அலைபாயவிடாமல் ஆழ் கடல் போன்று   வைக்க ஒரே வழி  தியானம்.இறையன்பு;இறைப்பற்று;
சிரத்தை;பக்தி.