Tuesday, April 3, 2012

unmai nilai. real position.

அன்புள்ள உள்ளங்களே,உள்ளம் சார்ந்த நன்றி.அன்பும் ஆசிகளும்.எங்கும் அன்பு அன்பு அன்பு.  ஆண்டவன் அன்பு நிறைந்தவன்.அன்பர்களுக்கு அருளும் தீர்க்க பந்து.தீன பந்து.
அவன் ப டைத்த உலகில் பெருங்கடல் தாகம் தீர்க்காது.ஆனால்,உணவளிக்கும்.விலை உயர்ந்த முத்துக்கள் அளிக்கும்.உணவுக்கு ருசி தரக் கூடிய உப்பு அளிக்கும்.அதன் நீர் ஆவி ஆகி நல்ல குடிநீராக மாறி பொழியும்.
அதை ஒரு கவிஞர்  அரசாங்கம் வரி  வசூல் செய்வதும் நல்லது செய்வதும் மேகம் மழை  பெய்வது  போல் நன்மை வெளிப்படையாகவும்,வரி வசூலிப்பது
நீர் ஆவி ஆவது போன்று மக்கள் உணராதவாறு இருக்கவேண்டும் என்று ஹிந்தி ஈரடி ஒன்றில் கூறி உள்ளார்.
ஆனால், இன்றைய அரசியல் நடுத்தர மக்களையும்,ஏழைகளையும் கண்டுகொள்வதே  இல்லை.
பணக்காரர்கள் பகுதியில் அணைத்து வசதிகள் சுத்தம் சுகாதாரம்.ஆனால் ஏழைகள் பகுதிக்கு சாலை வசதிகள்,குடிநீர் வசதிகள் இல்லை.
பணத்தாசையால் புதிய  நகரங்கள் உருவாகின்றன.அங்கு அடிப்படை வசதி,கழிவுநீர் செல்லும் வசதி,குடிநீர் வசதிகள்,போக்குவரத்து வசதிகள்
அரசாங்கம் எதுவும் செய்வதில்லை. காரணம் அரசாங்கம் கட்டடங்கள் காட்ட அனுமதிக்கிறது.வரி வசூலிக்கிறது.பணக்கார்கள் வாழும் பகுதிக்கு முன்னுரிமை வழங்கி பராமரிக்கிறது.போயஸ் கர்டனிலோ,கோபாலபுரத்திலோ,கிரீன் வேய்ஸ் சாலை யிலோ,சாக்கடை நாற்றம் ஆண்டுக்கணக்கில் பராமரிக்கப்படாமல் இருக்குமா/?ஆனால் மக்கள் அதிகம் வாழும் மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் சாக்கடை நாற்றம்.

முதலில் அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தால் சாக்கடை,சாலை வசதி செய்த பின் தான் வீடுகள் கட்ட அனுமதிக்கவேண்டும்.
ஆனால் வரிவாங்குவது முதலில்  அடுக்ககம் கட்டும் அனுமதி முழுவதும் ஊழல்.வீடு வாங்க கடன் அளிப்பதும் ஊழல். வாங்கியவர்கள் படும் அவதி சொந்த வீடு வாங்கவேண்டும் என்ற ஒரே ஆசைக்காக பில்டிங் ப்ரோமோடர்கள் சொல்வதெல்லாம் கேட்டு விதிக்கு புறம்பான வீடுகளுக்கும் கடன்.
தனக்கு கிடைக்கும் கைஊட்டலுக்காக அங்கீகரிக்கப்படாத  இரண்டாம் தளம் ,
மூன்றாம் தளத்திற்கும் கடன்.உண்ணாமல் உடுக்காமல் எந்தவித மகிழ்ச்சியும் 
இன்றி சொந்த வீடு வாங்கி ஒய்வு பெரும் காலத்தில் பெண்ணின் திருமணத்திற்கோ  அல்லது வேறு காரனங்களுக்கோ விற்கும் பொது தான் 
இந்த ஊழல் பூதாகாரமகிறது..இதற்கு யார் பொறுப்பு.
ஊழல் செய்யும் அதிகாரிகள/ஆசையால் எதுவும் சிந்திக்காமல் வீடுவாங்குபவர/
அந்த அங்கிகாரம் இல்ல பகுதிக்கு மின்வசதி,வீட்டுவரி,தந்நீர்வரி,எல்லாம் வசூலிக்கும் அதிகாரிகள/கடன் கொடுத்த அதிகாரிகளா/அரியல் வாதிகளா/
கட்டிடடம் கட்டும் வளர்ச்சியாலர்களா//
வேதனையுடன் ஒரே மகிழ்ச்சி சொந்தவீடு.
நேர்மை,நியாயம் பேசும் அரசியல் ஆட்சியாளர்களே இதற்குப் பொறுப்பு.
ஓட்டளிக்கும் மக்கள்.சொந்தவீடுவாங்கும் ஆசையால் ஏமாளிகள்.
வாங்கவில்லை என்றாலும் ஏமாளிகள்.
இதுதான் உண்மைநிலை.உலகம்.



No comments: