Tuesday, February 21, 2012

alavu athikamaanal

அன்பால் இவ்வுலகம் இயங்குகிறது.அன்பில்லை என்றால் உலகம் அழிகிறது.
அன்பான  காற்று  புயலாக மாறினால் அழிவு.மிதமான மழைஇடியுடன் கூடிய பெரும் மழையாக மாறினால் அழிவு.குறைந்த உணவு ஆரோக்கியம்.மிகுந்த உணவு  நோய்.அவ்வாறே அளவான வருமானம் நிம்மதி.அளவுக்கு அதிக வருமானம் தூக்கமின்மை.அளவுக்கு அதிகமானால் அன்பால் கெடும் குழந்தைகள்.அன்பால் கெடும் நண்பர்கள்.அன்பால் கெடும் .அன்பு அதிகமானால்.அவ்வாறே வெறுப்பும்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்.பணப்பற்று பாசம் அறுக்கும்.நீட்டி ஒலிக்கும்.நீதி ஒழிக்கும்.
பெற்றோர்,உற்றோர், நண்பர்கள் தானாக ஒதுங்குவார்கள்.அல்லது பேராசையால் ஒதுக்கப்படுவார்கள்.அதே சமயம் பணம் படைத்தவர்களுக்கு அனைவரும் அடிமையே.

No comments: